சித்தர்களை தரிசிக்கும் தவப்பயிற்சிகள் பழநி மலை, சிதம்பரம், திருவண்ணாமலை, சதுரகிரி, திருப்பதி, இராமேஸ்வரம் போன்ற சித்தர்கள் ஒளியாக இருக்கும் கோயில்களில் போதிக்கப்படும். சித்தர்களே தெய்வங்கள்! தெய்வங்களே சித்தர்கள்! சித்தர்களையும், சித்தர்களின் குருவாகிய முருகனுமாகிய சிவனையும் தரிசிக்கும் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. பழநியில் ஸ்ரீ பழநி போகர், திருப்பதியில் கொங்கணவர், சிதம்பரத்தில் திருமூலர், திருவண்ணாமலையில் இடைக்காடர்  இதுபோல சித்தர்கள் ஒளியாக உலாவும், அருள் தரும் இடங்களே கோயில்களாக போற்றப்படுகிறது.

 தரிசனம்

சித்தர்களை(தெய்வங்களை) தவத்திலும், உணர்விலும், ஆழ்நிலை ஒளியிலும், நேரிலும்(கண்களால் பார்த்தல்) தரிசிக்கலாம். இந்த அனைத்து பயிற்சிகளும்,   சித்தர்கள் தெய்வங்களாக ஒளிதரும், அவர்கள் இருப்பிடமாகிய கோயில்களில், அவர்கள் முன்நிலையில் அளிக்கப்படுகிறது.